Kerala Recipe: கேரளா ஸ்டைல் இறால் தீயல் – சுவையாக செய்வது எப்படி?
அதிக சத்துக்கள் கொண்ட இறால் மீனில் சுவையான தீயல் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)இறால் மீன் – 1 கப்
2)சின்ன வெங்காயம் – 1/4 கப்(நறுக்கியது)
3)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
4)வரமிளகாய் – 5
5)பூண்டு – 10
6)தேங்காய் துருவல் – 1 கப்
7)புளிக்கரைசல் – 1/4 கப் ( கெட்டியாக)
8)வெந்தயத் தூள் – 1/4 ஸ்பூன்
9)பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
10)கறிவேப்பிலை – 1 கொத்து
11) மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
12)கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
13)உப்பு – தேவையான அளவு
14)மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
15)சோம்பு – 1/2 ஸ்பூன்
16)மிளகு – 1/2 ஸ்பூன்
17)கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:-
முதலில் வாங்கி வந்த இறால் மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம்,சோம்பு,மிளகு,தேங்காய் துருவல், வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ஆறவைத்த பொருட்களை போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
பிறகு வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.அதன் பின்னர் பெருங்காயம், பூண்டு சிறிது தோல் நீக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு சுத்தம் செய்த இறால் மீன்,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.இதனை தொடரந்து புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடங்களுக்கு பின்னர் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி குழம்பு சுண்டி வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் வாசனைக்காக சிறிது கொத்தமல்லி தழை தூவினால் சுவையான இறால் தீயல் தயார்.