Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

0
294
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சியான கோழியில் சுவையான ஊறுகாய் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)எலும்பில்லாத கோழிக்கறி – 1/2 கிலோ
2)தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
3)உப்பு – தேவையான அளவு
4)மிளகாய் தூள் – 1/4 கப்
5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
6)இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
7)எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
8)கரம் மசாலா – 4 தேக்கரண்டி
9)கடுகு – 1 தேக்கரண்டி
10)கறிவேப்பிலை – 1 கொத்து
11)வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் வெந்தயம்,கடுகு சேர்த்து பொரிய விடவும்.பிறகு கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு சுத்தம் செய்த கோழி கறியை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.அதன் பிறகு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.சுமார் 20 நிமிடங்களுக்கு கோழி கறியை தேங்காய் எண்ணெயில் வேக விடவும்.

எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து கோழி கறி ஊறுகாயை ஆற விடவும்.

பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்து பூரி,சப்பாத்தி,தோசை,இட்லி,சூடான சாதத்திற்கு சாப்பிடவும்.

Previous articleவால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!
Next articleமூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!