Kerala Recipe: ‘மட்டா அரிசி தோசை’ – மொருமொரு சுவையில் செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Recipe: ‘மட்டா அரிசி தோசை’ – மொருமொரு சுவையில் செய்வது எப்படி?

கேரளா மட்டா அரிசியில் சுவையான மொருமொரு தோசை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மட்டா அரிசி – 2 கப்
2)வெள்ளை உளுந்து – 1/2 கப்
3)இட்லி அரிசி – 3/4 கப்
4)வெள்ளை அவல் – 1/4 கப்
5)வெந்தயம் – 1 தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு

ஒரு கிண்ணத்தில் 2 கப் மட்டா அரிசி மற்றும் 3/4 கப் இட்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

அடுத்து மற்றொரு கிண்ணத்தில் 1/2 கப் வெள்ளை உளுந்து, 1/4 கப் வெள்ளை அவல் மற்றும் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

சுமார் 5 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பின்னர் அரைக்க தொடங்கவும். கிரைண்டரில் ஊறவைத்த அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த உளுந்து, அவலை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பஞ்சு போன்று அரைக்கவும். இதை அரைத்த அரிசி மாவில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடவும்.

எட்டு மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு புளித்திற்கும். பிறகு அடுப்பில் தோசைக் கல் வைத்து அவை சூடானதும் அரைத்த மாவை ஊற்றி தோசை வார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றி சுடலாம். இந்த மட்டா அரிசி தோசை கேரளர்களின் விருப்ப உணவாகும்.