Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி?

0
100
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் போஹா(அவல்) லட்டு சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)அவல் – 1 கப்
2)நாட்டு சர்க்கரை – 3/4 கப்
3)நெய் – 3 தேக்கரண்டி
4)முந்திரி – 5
5)உலர்திராட்சை – 10
6)ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெள்ளை அவலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். அவல் பொன்னிறமாக வறுபட்டு வந்ததும் அடுப்பை அணைத்து அவலை ஆற விடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்த அவலை போட்டு ரவை பதத்திற்கு அரைக்கவும். இதை ஒரு தட்டிற்கு கொட்டி விடவும். அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள நாட்டு சரக்ரையை அவலில் போட்டு கலந்து விடவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் பொடி போட்டு பொன்னிறமாக வேகவிட்டு அவலில் சேர்த்து கலக்கவும்.

தொடரந்து 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். இந்த உருண்டையை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்து சாப்பிடவும். இந்த அவல் லட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களையும் வழங்குகிறது.