Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

0
191
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

பாயாசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். அதிலும் சேமியா, பால், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் பாயாசம் அதிக சுவையாக இருக்கும். இந்த சேமியா பாயாசத்தை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)நெய் – 4 தேக்கரண்டி
2)முந்திரி – 10
3)உலர் திராட்சை – 10
4)பால் – 2 கப்
5)சேமியா – 1 கப்
6)சர்க்கரை – 1/2 கப்
7)ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 4 தேக்கரண்டி நெய் ஊற்றிக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து உலர் திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு அந்த நெயில் ஒரு கப் சேமியாவை அதில் போட்டு கிளறவும்.

2 நிமிடங்களுக்கு பின்னர் 2 கப் பால் சேர்த்து சேமியாவை நன்கு வேகவிடவும். சேமியா வெந்து கொண்டிருக்கும் பொழுது 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.

பிறகு வாசனைக்காக 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். இறுதியாக நெயில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் சூடான சுவையான சேமியா பாயாசம் தயார்.

தங்கள் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஜவ்வரிசி வேக வைத்து அதை சேமியா பாயாசத்தில் சேர்க்கலாம்.

Previous articleஏற்கனவே ஒரு மகள் இரண்டாம் தாரமாக செல்லும் வரலட்சுமி!! திடீர் நிச்சயதார்த்தத்தின் பின்னணி!! 
Next articleமார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!