பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்!

Photo of author

By Jayachandiran

பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்!

Jayachandiran

பள்ளி மாணவியை கற்பழித்த பாஜக உறுப்பினர்! மனதை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! முஸ்லீம் லீக் கட்சியினர் போராட்டம்!

நான்காம் வகுப்பு படித்துவந்த மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பத்மராஜன் (45) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான்காம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு அப்பகுதி பாஜக பஞ்சாயத்து உறுப்பினராக செய்யல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னிடம் கல்வி கற்றுவந்த
4 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பத்மராஜன் திட்டமிட்டு தனது பாலியல் இச்சைக்காக சற்றும் யோசிக்காமல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த ஜனவரி 15 – பிப்ரவரி 2 ஆகிய நாட்களுக்கு இடையே நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு மாணவி மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

மாணவியின் சூழலை அறிந்த பெற்றோர் கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். கவுன்சலிங் நடந்தபோதுதான் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தை பற்றி மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மூலம் குழந்தைகள் தன்னார்வ குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனை அறிந்து கொண்ட ஆசிரியர் பத்மராஜன் காவல்துறை கைதுக்கு பயந்து தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்வதில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. மாணவிக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நீதி வேண்டும் என்னு காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து காவல்துறை மிக தீவிரமான தேடுதல் வேட்டையின் மூலம் பத்மராஜனை கைது செய்து வழக்கும் பதிவின் பின்னர் சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.