கேரளா ஸ்பெஷல் தேங்காய் பால் முறுக்கு – சுவையாக செய்வது எப்படி?
பச்சரிசி மாவு மற்றும் தேங்காய் பால் கொண்டு கேரளா ஸ்டைலில் முறுக்கு செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
*பச்சரிசி மாவு – 2 கப்
*வெண்ணெய் – 1 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*தேங்காய் பால் – 1 கப்
*சீரகம் – 2 தேக்கரண்டி
*சர்க்கரை – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
ஒரு கப் பச்சரிசியை தண்ணீரில் அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு காய விடவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.
பிறகு ஒரு அகலமான கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு வெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு 2 தேக்கரண்டி சீரகம் அல்லது கருப்பு எள் சேர்த்து கலந்து விடவும். அடுத்து ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
இந்த தேங்காய் பாலை பச்சரிசி மாவில் ஊற்றவும். அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
அடுத்து ஒரு முறுக்கு பிழியும் மெஷின் எடுத்து அதில் முறுக்கு மாவு ஒருஉருண்டை போட்டு வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் முறுக்கு மாவை எண்ணெயில் பிழிந்து விடவும். பிறகு இருபுறமும் முறுக்கு வெந்து வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த முறையில் முறுக்கு செய்தால் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.