கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி – அதிக ருசியுடன் செய்யும் முறை!!

0
165
How to make Kerala Special Malabar Chicken Biryani Recipe in Tamil

கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி – அதிக ருசியுடன் செய்யும் முறை!!

மலபார் சிக்கன் பிரியாணி

கேரளாவில் உள்ள மலபார் மக்களின் பேவரைட் உணவு வகைகளில் ஒன்று சிக்கன் பிரியாணி. இந்த பிரியாணி உலகம் முழுவதும் பேமஸான ஒன்றாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சிக்கன்  – 1 கிலோ

*பஸ்மதி அரிசி – 1 கிலோ

*பச்சை மிளகாய் – 12

*பட்டை – 1 துண்டு

*கிராம்பு – 4

*பெருங்சீரகம் – 1தேக்கரண்டி

*ஏலக்காய் – 2

*கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 10

*இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

*கொத்துமல்லித் தழை – சிறிதளவு

*புதினா – சிறிதளவு

*தயிர் – 150 மில்லி

*தக்காளி – 150 கிராம்

*வெங்காயம் – 1 கிலோ

*இலவங்கப்பட்டை – 2 துண்டுகள்

*பிரியாணி இலை – 2

*முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை – 50 கிராம்

*ஏலக்காய் – 5

*நெய் – 200 கிராம்

*கொத்தமல்லித்தூள் – 2 தேக்கரண்டி

*பால் – 500 மில்லி

*குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு,பெருஞ்சீரகம், ஏலக்காய், கருப்பு மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துப் நன்கு வதக்கவும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விடவும்.

இந்த கேப்பில் 1 கிலோ பாசுமதி அரசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் அரசி ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு பெரிய வாணலி வைத்து சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் மசாலாக்கள், வெட்டிய வெங்காயம், புதினா, கொத்துமல்லி தழை, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, பிரியாணி இலை உள்ளிட்டவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் தண்ணீரில் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு மிதமான தீயில் 1 கிளறு கிளறவும். அடுத்து இந்த வாணலியை ஒரு தட்டு கொண்டு மூடி 15 நிமிடங்கள் அரிசி கலவையை வேக விடவும்.

பின்னர் ஏற்கனவே வெந்து கொண்டிருக்கும் சிக்கன் அடுப்பை அணைத்து விடவும். அடுத்து அரசி கலவை கொதித்து கொண்டிருக்கும் வாணலியில் வேக வைத்துள்ள சிக்கன் கலவையை சேர்த்துக் கொள்வும். அதோடு குங்குமப் பூ சேர்த்துக் கொள்ளவும்.

How to make Kerala Special Malabar Chicken Biryani Recipe in Tamil
How to make Kerala Special Malabar Chicken Biryani Recipe in Tamil

பின்னர் வாணலியை மீண்டும் ஒரு தட்டு போட்டு மூடி விடவும். அடுத்து மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் சில முந்திரி மற்றும் உலர் திராட்சை மற்றும் சிறிதளவு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும்.

இதை வெந்து கொண்டிருக்கும் சிக்கன் பிரியாணியில் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் மலபார் சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும்.

Previous articleநமக்கு தீராத தொல்லையாக இருக்கும் “முதுகு வலி” நீங்க அற்புத வீட்டு வைத்தியம் இதோ!!
Next articleESIC மருத்துவமனையில் மாதம் ரூ.92,300/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!