கேரளா ஸ்பெஷல் ஓணம் அவியல் – சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Divya

கேரளா ஸ்பெஷல் ஓணம் அவியல் – சுவையாக செய்வது எப்படி?

நம் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். பல வித காய்கறிகளை போட்டு சமைக்கப்படும் இந்த அவியல் ஓணம் பண்டிகையின் போது ஸ்பெஷல் உணவாக தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*கேரட் – 1/4 கப் (நீள வடிவில் நறுக்கியது)

*பீன்ஸ் – 10 (நீள வடிவில் நறுக்கியது)

*முருங்கைக்காய் – 1 (நீள வடிவில் நறுக்கியது)

*அவரைக்காய் – 10 நறுக்கியது

*கத்தரிக்காய் – 3 நறுக்கியது

*சேனை கிழங்கு – 1/4 கப்

*உருளை கிழங்கு – 1 (தோல் சீவி நறுக்கியது)

*தேங்காய் துருவல் – 1/4 கப்

*தயிர் – 1/4 கப்

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 5

*உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பில்லை – 2 கொத்து

*உப்பு – தேவையான அளவு

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 1/4 கப் நறுக்கிய கேரட்,10 நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய 1 முருங்கை காய், 10 நறுக்கிய அவரைக்காய் சேர்த்து கொள்ளவும்.

அதனுடன் 3 நறுக்கிய கத்தரிக்காய், 1/4 கப் சேனைக் கிழங்கு, தோல் சீவி நறுக்கி வைத்துள்ள 1 உருளைக் கிழங்கு சேர்த்து வேக வைக்க 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் கொள்ளவும். அதோடு
தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1/4 கப் தேங்காய் துருவல், 1 தேக்கரண்டி சீரகம், 5 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் குக்கரில் சேர்த்த காய்கறிகள் அனைத்தும் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதுகளை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

அதன் பின் 1/4 கப் தயிர் சேர்த்து கிளறி விடவும். பிறகு உப்பு சிறிதளவு சேர்த்து 5 நிமிடம் வரை இதை கொதிக்க விடவும்.

அவை நன்றாக கொதித்த பின் குக்கரை இறக்கி விடவும். அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் நன்கு சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு சேர்க்கவும்.

பின்னர் அதில் 2 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பிறகு அடுப்பை அணைத்து தாளித்த கலவையை தயார் செய்து வைத்துள்ள அவியலில் சேர்த்து கிளறவும். இவ்வாறு செய்தால் ஓணம் அவியல் மிகவும் சுவையாக இருக்கும்.