Kerala Style : கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை ரெசிபி – இப்படி செய்தால் அசத்தல் டேஸ்டில் இருக்கும்!!

Photo of author

By Divya

Kerala Style : கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை ரெசிபி – இப்படி செய்தால் அசத்தல் டேஸ்டில் இருக்கும்!!

நம் அண்டை மாநிலமான கேரளாவில் புட்டு வகைகள் அதிகளவில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டுடன் கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் குழம்பான கடலை கறியை வைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி மாவு – 200 கிராம்

*உப்பு – சிறிதளவு

*தேங்காய் துருவல் – 1 கப்

கடலைக் கறி செய்ய தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*சோம்பு – 1/2 தேக்கரண்டி

*ஏலக்காய் – 2

*கிராம்பு – 2

*பட்டை – 1

*பூண்டு – 3

*இஞ்சி – சின்ன துண்டு

*பெரிய வெங்காயம் – 2

*தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு

*தக்காளி – 1(நறுக்கியது)

*கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

*கருப்பு கொண்டை கடலை – 1 கப்

செய்முறை:-

ஒரு பவுலில் 1 கப் அளவு கருப்பு கொண்டை கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற விடவும்.

அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து ஊறவைத்த ருப்பு கொண்டை கடலை போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.

அடுத்து ஒரு பவுலில் 200 கிராம் பச்சரிசி மாவு மற்றும் பின்ச் அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவை உதிரியாக கலந்து விடவும். புட்டு மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

அடுத்து 1 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1/2 தேக்கரண்டி சோம்பு, 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 பட்டை, 3 பல் பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 1 தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கும் தருணத்தில் 2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.

இந்த கலவையை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து வேக வைத்துள்ள கொண்டை கடலை + வேக வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அரைத்த விழுதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொண்டைக்கலையில் ஊற்றி கிளறி விடவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பச்சை வாசனை நீங்கும் வரை கொண்டை கடலை கறியை வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

அடுத்து புட்டு மேக்கர் எடுத்து அதில் சிறிதளவு துருவிய தேங்காய் சேர்க்கவும். அதன் மேல் புட்டு மாவை போடவும். மீண்டும் புட்டு மாவு மேல் துருவிய தேங்காய் சேர்க்கவும். அதேபோல் புட்டு மாவு என்று மாறி மாறி சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் 5 நிமிடத்தில் புட்டு ரெடி ஆகிவிடும்.பிறகு புட்டு மேக்கர் மூடியில் இருந்து ஆவி வந்த பின் அடுப்பை அணைத்து விடவும். அடுத்ததாக தயார் செய்து வைத்துள்ள புட்டை மெதுவாக வெளியில் எடுக்கவும். இந்த புட்டு கடலை ரெசிபி கேரளா மக்களின் பேவரைட் ஆகும்.