கேரளா ஸ்டைல் பச்சரிசி ஆப்பம் – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்!!

Photo of author

By Divya

கேரளா ஸ்டைல் பச்சரிசி ஆப்பம் – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்!!

கேரளா மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆப்பம். இதில் பச்சரிசி ஆப்பம், பால் ஆப்பம், ராகி ஆப்பம் என பல வகைகள் இருக்கிறது. இதில் பச்சரிசி, தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 2 கப்

*தேங்காய் – 1/2 கப் (துருவியது)

*இளநீர் – 2

*உப்பு – தேவை யான அளவு

செய்முறை:-

ஆப்பம் செய்ய முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 கப் பச்சரிசி சேர்த்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 முறை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற விடவும்.

1 மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த அரிசியை மீண்டும் தண்ணீர் கொண்டு சுத்தம் சுத்தம் செய்து மிக்ஸி அல்லது பின்னர் கிரைண்டரில் போட்டுக் கொள்ளவும். அதனுடன் 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் மாவு அரைக்க தண்ணீருக்கு பதில் தேவையான அளவு இளநீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அவை சூடேறியதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு துணியால் தேய்த்து கொள்ளவும்.

அடுத்து அதில் ஒரு கரண்டி ஆப்ப மாவை ஊற்றி ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி கொள்ளவும். பிறகு ஒரு தட்டை வைத்து 2 அல்லது 3 நிமிடம் மூடி வைக்கவும்.

அவை நன்கு வெந்து வந்ததும் எடுத்து இரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த ஆப்பத்திற்கு தேங்காய் பால் சிறந்த காமினேஷனாக இருக்கும்.