கேரளா ஸ்டைல் “சிக்கன் குழம்பு” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!
Kerala Style Chicken Curry: நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி. இதில் வறுவல், குழம்பு, தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம். அந்த வகையில் கோழிக்கறி எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள்.
இது கேரள மக்களின் பிரியமான அசைவ உணவாகும். இப்படி செய்தால் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*சிக்கன் – 1/2 கிலோ
*வெங்காயம் – 3
*தாக்களி – 2
*பச்சை மிளகாய் – 3
*இஞ்சி – சிறு துண்டு
*பூண்டு – 10 பற்கள்
*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
*கொத்தமல்லி தூள் – 3 தேக்கரண்டி
*தேங்காய்- 1 கப்
*எண்ணெய் – 50 மில்லி
*பட்டை – 1
*கிராம்பு – 5
*ஏலக்காய் – 2
*சோம்பு – 1 தேக்கரண்டி
*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 2 கொத்து
செய்முறை:-
How to make Kerala Style Chicken Curry
முதலில் எடுத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.
அடுத்து இஞ்சி தோலை நீக்கி கொள்ளவும். அதேபோல் பூண்டு தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் இவை இரண்டையும் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். அடுத்து 1 மூடி தேங்காய் எடுத்து துருவிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அதில் எடுத்து வைத்துள்ள பட்டை, இலவங்கம், கருப்பு மிளகு, ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து வதக்கிய பொருட்களை நன்கு ஆற விடவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி போந்து பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி கொள்ளவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி கலவை நன்கு வதங்கி வந்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் ஊற்றிக் கொள்ளவும். இவை ஒரு கொதி வந்ததும் சிக்கனை சேர்த்து வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து வந்த உடன் அடுப்பை அனைக்கவும்.