ஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி?

0
34
#image_title

ஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த இறைச்சி வகை சிக்கன். இதில் அதிகளவு
புரதம், வைட்டமின்கள் இருக்கின்றது. இந்த சிக்கனில் வறுவல், ப்ரை, குழம்பு, கிரேவி உள்ளிட்டவைகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.

அதிக சுவை உள்ள சிக்கனை வைத்து கேரளா ஸ்டைல் ஒரு ஸ்பெஷல் உணவு செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கோழி – 1/2 கிலோ

*இலவங்கப்பட்டை – 2 துண்டு

*கிராம்பு – 4

*மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி

*கேரட் – 1 (நறுக்கியது)

*பச்சை பீன்ஸ் – 1/2 கப்

*உருளைக்கிழங்கு – 1

*சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 2

*பூண்டு – 4 முதல் 5

*இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது)

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*முந்திரி பருப்பு – 10

*உப்பு – தேவையான அளவு

*தேங்காய் பால் – 200 மில்லி

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை:-

சிக்கன் ஸ்டவ் கறி செய்வதற்கு முதலில் 1/2 கிலோ சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து எடுத்து வைத்துள்ள காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கர் வைத்து நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீர் ஊற்றி 1 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

விசில் நின்றதும் குக்கரை திறந்து வேக வைத்த காய்கறிகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவை மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து கிளறி விவும். பின்னர் வெட்டி வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து வதக்கி விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். 1 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். விசில் நின்றதும் குக்கரை திறந்து வேக வைத்துள்ள கேரட், பீன்ஸ் சேர்த்து கலந்து விடவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து சில நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அவை சூடேறியதும் முந்திரி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். இதை வேக வைத்துள்ள சிக்கனில் கலந்து கொள்ளவும்.

இந்த கேரளா ஸ்டைல் ​​சிக்கன் ஸ்டவ் ரெசிபி ஆப்பம், இடியாப்பம் போன்றவைகளுக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.