ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “Coconut Chicken Curry” – சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Divya

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “Coconut Chicken Curry” – சுவையாக செய்வது எப்படி?

கேரளா மக்களின் உணவு வகைகள் அதிக சுவையுடன் காரணம் தேங்காய் தான். இதை அரைத்து பால் எடுத்து உணவில் சேர்த்தால் உணவிற்கு அதிக ருசி கிடைக்கும். தேங்காய் எண்ணெயை வைத்து குழம்பு செய்து சாப்பிட்டால் அதிக சுவையுடன் இருக்கும்.

இந்த தேங்காயை பயன்படுத்தி நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சியான சிக்கன் கறி கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையானபொருட்கள்:-

பொரிக்க தேவையானவை:

*சிக்கன் – 1/2 கிலோ

*பச்சரிசி மாவு – 3 தேக்கரண்டி

*கரம் மசால் – 1/4 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*எண்ணெய் – சிக்கன் பொரிக்க தேவையான அளவு

சிக்கன் கறி செய்ய தேவையானவை:

*பெரிய வெங்காயம் – 3 (நறுக்கியது)

*இஞ்சி பூண்டு – 1/2 தேக்கரண்டி

*தக்காளி – 2 (நறுக்கியது)

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*கரம் மசால் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*தேங்காய் பால் – 1 டம்ளர்

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*கருவேப்பிலை – 1 கொத்து

*பச்சை மிளகாய் – 2(நறுக்கியது)

செய்முறை:-

How to Make Coconut Chicken Curry:

ஒரு பவுலில் 1/2 கிலோ சிக்கனை போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் 3 தேக்கரண்டி பச்சரிசி மாவு, 1/4 தேக்கரண்டி கரம் மசால், 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து சிக்கன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடேறியதும் ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிக்கன் பொரித்த எண்ணெயில் 4 முதல் 5 தேக்கரண்டி அளவு ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள 3 பெரிய வெங்காயத்தை சேர்த்துக் வதக்கி விடவும். அடுத்து 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசால் தூள், 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.

அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் 1 டம்ளர் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.

சிக்கன் கலவையில் சேர்க்கப்பட்ட தேங்காய் பால் சுண்டி கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னார் நறுக்கிய 2 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும். இவ்வாறு செய்தால் Coconut Chicken Curry மிகவும் சுவையாக இருக்கும்.