கேரளா ஸ்டைலில் மீன் வறுவல்! மொறுமொறு கமகம சுவையில் செய்வது எப்படி?

0
124
#image_title

கேரளா ஸ்டைலில் மீன் வறுவல்! மொறுமொறு கமகம சுவையில் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மீன் வறுவல் கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மீன் – 1/2 கிலோ
2)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
3)கொத்தமல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி
4)ரெட் சில்லி பவுடர் – 1 தேக்கரண்டி
5)கரம் மசாலா – 3/4 தேக்கரண்டி
6)இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
7)எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
8)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
9)கறிவேப்பிலை – 2 கொத்து
10)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

வாங்கி வந்த ,மீனை ஒரு சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூளை மற்றொரு கிண்ணத்தில் போட்டு கலக்கவும்.

அதனோடு இஞ்சி பூண்டு விழுது போட்டு கலக்கவும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலக்கவும்.

இதில் மீன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி எடுக்கவும். 30 நிமிடங்களுக்கு மீனை ஊறவிட்ட பின்னர் பொரிக்கலாம்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

மீன் துண்டுகள் அனைத்தையும் பொரித்த பின்னர் கறிவேப்பிலையை போட்டு பொரித்தெடுக்கவும். மொருமொரு மீனுடன் பொரித்த கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.