கேரளா ஸ்டைல் மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி..?

0
259
#image_title

கேரளா ஸ்டைல் மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி..?

அசைவ உணவுகளில் மீன் அதிக ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இந்த மீனில் கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எவ்வாறு என்பது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மீன்

*மிளகாய் தூள்

*கரம் மசாலா

*இஞ்சி பூண்டு விழுது

*மிளகு தூள்

*உப்பு

*எண்ணெய்

*மஞ்சள் தூள்

செய்முறை:-

மீனை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டவும். மீனில் மசாலா ஊறி வர 1 மணி நேரம் வரை விடவும்.

அடுத்து தோசை தவாவில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் மசாலாவில் ஊற வைத்துள்ள மீனை சேர்த்து இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். இந்த முறையில் மசாலா தயார் செய்து மீன் வறுவல் செய்தால் அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.

Previous articleஇது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
Next articleஅடகு வைத்த நகையை விரைவில் மீட்க ஆசைப்படுபவரா நீங்கள்..? அப்போ முதலில் இதை செய்யுங்கள்..!