கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் – செய்வது எப்படி?

Photo of author

By Divya

கேரளா ஸ்டைல் பச்சை பயறு கடையல் – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் பச்சைபயறு கடையல் செய்யும்முறை கீழே கொடுப்பட்டு இருக்கிறது. இந்த செய்முறை விளக்கப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை பயறு – 3/4 கப்

*வெங்காயம் – 3/4 கப் (பொடியாக நறுக்கியது)

*தக்காளி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

*பூண்டு – 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 1 (கீறியது)

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*காஷ்மீரி மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

*மல்லித் தூள் – 3/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – சுவைக்கேற்ப

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

*கடுகு – 3/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)

*வரமிளகாய் – 1

*கறிவேப்பிலை – சிறிது

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சை பயறை 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்த பச்சை பயறை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து மூடி போட்டு 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். தக்காளி வெந்ததும் வேக வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து சில நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மத்து கொண்டு கடையவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கடைந்து வைத்துள்ள பச்சை பயறுடன் சேர்த்து கிளறி விடவும். இவ்வாறு செய்தால் கேரளா பச்சை பயறு கடையல் சுவையாக இருக்கும்.