கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி – செய்வது எப்படி?
அதிக சத்துக்களை உள்ளடக்கிய காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை வைத்து கூட்டுக்கறி ரெசிபி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*புடலங்காய் – 1
*கடுகு – 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*மிளகாய் வற்றல் – 2
*உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
*எண்ணெய் – தேவையான அளவு
*தேங்காய் துருவல் – சிறிதளவு
*மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
*பச்சை மிளகாய் – 2
*உப்பு – தேவையான அளவு
செய்முறை…
ஒரு புடலங்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள புடலங்காய் மற்றும் அவை வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய் துருவிக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவல், 2 மிளகாய் வற்றல் மற்றும் 2 பச்சை மிளகாய் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் 1 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்துக் கிளறவும். அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுத்து பொடித்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி இறக்கவும்.