கேரளா ஸ்டைலில் கமகம சிக்கன் குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!

0
177
#image_title

கேரளா ஸ்டைலில் கமகம சிக்கன் குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!!

கேரளா மக்களின் பேவரைட் சிக்கன் குழம்பு சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறையில் செய்தால் சிக்கன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சிக்கன் – 1/2 கிலோ

*வெங்காயம் – 3

*தாக்களி – 2

*பச்சை மிளகாய் – 3

*இஞ்சி – ஒரு துண்டு

*பூண்டு – 10

*எண்ணெய் – 50 மில்லி

*பட்டை – 1

*கிராம்பு – 5

*ஏலக்காய் – 2

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*மல்லி தூள் – 3 தேக்கரண்டி

*தேங்காய் – 1 கப்

*பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு கழுவி நறுக்கி கொள்ளவும். பாதி தேங்காய் மூடி திருகி வைத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மிளகு, மற்றும் திருகி வைத்த தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் சிறிதளவு கருவேப்பிலை காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின்னர் கழுவி வைத்த சிக்கனை சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இவ்வாறு செய்தால் கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு சுவையாக இருக்கும்.

Previous articleஇப்படி எல்லாம் பெண்கள் செய்தால் பெண் ஆணின் மீது உயிராக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்!
Next articleவயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை ஒரு இரவில் காணாமல் போக இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்..!