Kerala Style : கேரளா ஸ்டைல் முருங்கை காய் மாங்கா அவியல் – சுவையாக செய்வது எப்படி?

0
90
#image_title

Kerala Style : கேரளா ஸ்டைல் முருங்கை காய் மாங்கா அவியல் – சுவையாக செய்வது எப்படி?

நம் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். முருங்கை மற்றும் பச்சை மாங்காய் வைத்து சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

முருங்கை காய் – 4

*மாங்காய் – 1

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 2 கொத்து

*சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)

*மஞ்சள் தூள் – 1 பின்ச் அளவு

அரைக்க:-

*தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு

*பூண்டு – 5 பற்கள்

*சின்ன வெங்காயம் – 5

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*உப்பு – தேவையான அளவு

முருங்கை காய் மாங்கா அவியல் செய்முறை:

முதலில் 4 முருங்கை காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பச்சை மாங்காயை சிறு துண்டாக நறுக்கவும். அதேபோல் 10 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, 2 கொத்து கருவேப்பிலை மற்றும் 10 சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள முருங்கை மற்றும் மாங்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். அதில் 1 பின்ச் அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். காய்கள் வேக சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 5 பூண்டு பற்கள், தோல் நீக்கிய 5 சின்ன வெங்காயம், 1/4 தேக்கரண்டி சீரகம், மற்றும் 2 பச்சை மிளகாய் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.

இந்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்த்து கிளறி விடவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி அடுப்பை அணைத்தால் அருமையான முருங்கைக்காய் மாங்காய் அவியல் ரெடி.

Previous articleஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!
Next articleசொத்தைப்பல் வலி? 1 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பாட்டி சொன்ன வைத்தியம்!!