கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..!
மக்கள் அனைவராலும் விரும்பப்படும் கோழி இறைச்சியை வைத்து கேரளா ஸ்டைலில் நாடன் கோழி குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
தேவையான பொருட்கள்…
*கோழி இறைச்சி – 1/2 கிலோ
*பெரிய வெங்காயம் – இரண்டு
*இஞ்சி பூணடு பேஸ்ட் – 1 ஸ்பூன்
*தக்காளி – 1
*தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
*கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
*கரம் மசாலா – 1 ஸ்பூன்
*மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
*தேங்காய் துருவல் – 1/2 கப்
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*உப்பு – தேவையான அளவு
நாடன் கோழி குழம்பு செய்வது எப்படி?
அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, சுத்தம் செய்த கோழி இறைச்சி சேர்த்து கிளறி விடவும்.
சிக்கன் வேகும் தருணத்தில் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கோழிக் கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இவை வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி தேங்காய் துண்டுகள் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
கோழி இறைச்சி, மசாலா பொருட்கள் நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த நாடன் கோழி குழம்பு கேரளா மக்கள் அதிக விரும்பி உண்ணக் கூடியவை ஆகும்.