கேரளா ஸ்டைலில் பால் பாயசம்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

Photo of author

By Divya

கேரளா ஸ்டைலில் பால் பாயசம்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

பால் பாயசம் மிகவும் தித்திப்பாகவும், அதிக சுவையுடனும் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1/2 லிட்டர்

*பச்சரிசி – 1 1/2 தேக்கரண்டி

*முந்திரி பருப்பு – 12

*உலர் திராட்சை – 8

*ஏலக்காய் தூள் – 2 தேக்கரண்டி

*நெய் – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 1/2 தேக்கரண்டி பச்சரிசி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பால் நன்கு கொதித்து வந்த பின்னர் ஊற வைத்துள்ள பச்சரிசியை சேர்த்து நன்கு கிண்டவும்.
பாலில் சேர்க்கப்பட்ட பச்சரிசி வெந்து கெட்டி தன்மையை அடைந்ததும் அதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி அளவு நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து வறுத்து பால் பாயசத்தில் சேர்த்து கிளறி இறக்கவும். இவ்வாறு செய்தால் கேரளா ஸ்டைல் பால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும்.