கேரளா ஸ்டைல் “பைனாப்பிள் புளிச்சேரி” – இப்படி செய்தால் ருசி கூடும்!!

0
91
#image_title

கேரளா ஸ்டைல் “பைனாப்பிள் புளிச்சேரி” – இப்படி செய்தால் ருசி கூடும்!!

கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று பைனாப்பிள் புளிசேரி. இவை பழுத்த அன்னாசிப்பழம், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*பழுத்த அன்னாசிப் பழம் – 2 கீற்று

*புளிப்பில்லாத தயிர் – 3/4 கப்

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:-

*தேங்காய் துண்டுகள் – 4

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*அரிசி மாவு – 1 1/2 தேக்கரண்டி

*தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தாளிக்க:-

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*குண்டு மிளகாய் – 3

*கறிவேப்பிலை – 2 கொத்து

*தேங்காய் எண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

*ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம், அரிசிமாவு, மிளகாய்த்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து மைய அரைக்கவும்.

*அரைத்த தயிருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

*அன்னாசிப் பழத்தை சுத்தம் செய்து பிளேட்டில் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள அன்னாசிப் பழம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

*அன்னாசிப் பழம் பாதி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மேல் 1 தேக்கரண்டி அளவு காய்ச்சாத தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

*அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு. வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளவும். இந்த தாளிப்பை தயார் செய்து வைத்துள்ள பைனாப்பிள் புளிசேரியில் கலந்து விடவும்.

Previous articleபிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!
Next articleஅதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர வீடெங்கும் செல்வம் பெருக ஒருமுறை இப்படி செய்யுங்கள்!!