கேரளா ஸ்டைல் போஹா சர்க்கரை பொங்கல் ரெசிபி!

0
184
#image_title

கேரளா ஸ்டைல் போஹா சர்க்கரை பொங்கல் ரெசிபி!

இந்த பொங்கல் பண்டிகைக்கு போஹா(அவுல்) வைத்து சர்க்கரை பொங்கல் செய்து சுவைத்து பாருங்கள். இந்த பொங்கல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*போஹா – 1/2 கப்

*பாசி பருப்பு – 2 1/2 டீஸ்பூன்

*துருவிய வெல்லம் – 3/4 கப்

*பால் – 3 டீஸ்பூன்

*முந்திரி பருப்பு – 7

*ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

*உலர் திராட்சை – 15

*நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/2 அவுல் மற்றும் பசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அவுல் மற்றும் பருப்பு நன்கு ஊறி வந்ததும் இதை குக்கரில் சேர்த்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை நடுத்தர தீயில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து 3/4 கப் துருவிய வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கவும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள அவுல் மற்றும் பருப்பை சேர்த்து கிளறி விடவும். அவுல் கலவை கெட்டியாகும் வரை குறைவான தீயில் வேக விடவும். பின்னர் 3 டீஸ்பூன் பால் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் இடித்த ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும்.

மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் முந்திரி, உலர்திராட்சை சேர்த்து வறுத்து வெந்து கொண்டிருக்கும் பொங்கலில் போட்டு கிளறி விடவும். இவ்வாறு செய்தால் போஹா சர்க்கரை பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.