Kerala Style Recipe: சூடான சுவையான மலபார் பரோட்டா ரெசிபி – வீட்டில் செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Style Recipe: சூடான சுவையான மலபார் பரோட்டா ரெசிபி – வீட்டில் செய்வது எப்படி?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பரோட்டா இருக்கிறது. இந்த பரோட்டாவின் கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, சிலோன் புரோட்டா, வீச்சு புரோட்டா என்று பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் மிகவும் சுவையான மலபார் புரோட்டா செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மைதா மாவு – அரை கிலோ

*முட்டை – ஒன்று

*பால் – 100 மில்லி

*தயிர் – 50 மில்லி

*தூள் உப்பு – தேவையான அளவு

*சர்க்கரை – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:-

ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 100 மில்லி பால், 50 மில்லி தயிர், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்து 1/2 கிலோ மைதா மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து அதன் மேல் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். பின்னர் ஒரு ஈரக் காட்டன் துணியை மைதா மாவின் மேல் போட்டு1 1/2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

1 1/2 மணி நேரத்திற்கு பிறகு உருட்டி வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை தட்டி இரண்டு கைகளுக்கு வீசி மடித்து எடுக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து அவை சூடேறியதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பரோட்டா மாவை போட்டு வேக விடவும். பரோட்டா வந்து வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றி கைகளில் வைத்து அடித்து பரிமாறினால் சுவையான மலபார் பரோட்டா தாயார்.