Kerala Style Recipe: கேரளா மக்கள் ஸ்டைலில் பருப்பு பாயசம் செய்வது எப்படி?
நம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். அதிலும் பாசிப்பயறு சேர்த்த பாயசம் என்றால் அதிக ருசியுடன் இருக்கும். இந்த பாயசத்திற்கு பாசி பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும். இந்த சுவையான பாயசத்தை கேரளா மக்கள் செய்யும் முறையில் செய்தால் அதிக சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*பாசி பருப்பு – 100 கிராம்
*ஜவ்வரிசி – 50 கிராம்
*வெல்லம் – 200 கிராம்
*ஏலக்காய் – 2
*நெய் – 2 தேக்கரண்டி
*உலர் திராட்சை – 15
*முந்திரி பருப்பு – 8
*தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 100 கிராம் பாசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வரை வறுத்துக் அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு பவுலில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளவும்.
இந்த பாசி பருப்பை ஒரு குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளவும். 4 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் நின்றதும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை நன்கு குழைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 50 கிராம் ஜவ்வரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும். இவை வெந்து வந்ததும் குழைத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து கலந்து விடவும்.
பிறகு 200 கிராம் அளவு இடித்த வெல்லம் சேர்த்து கலந்து விடவும். பின்னர் 2 ஏலக்காயை இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் 15 உலர் திராட்ச்சை, 8 முந்திரி சேர்த்து வறுத்துக் கொதிக்கும் பாயசத்தில் ஊற்றி கலந்து விடவும். பின்னர் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். இந்த முறையில் பாசி பருப்பு பாயசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.