Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் சக்க வரட்டி – செய்வது எப்படி?

0
44
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் சக்க வரட்டி – செய்வது எப்படி?

நம் அனைவருக்கு பிடித்த அதிக வாசனை கொண்ட பலா பழத்தில் சக்க வரட்டி என்ற இனிப்பு வகை எப்படி செய்வது என்ற தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இது கேரளா மக்களின் பேவரைட் இனிப்பு வகை ஆகும். பலா பழத்துடன் வெல்லம் மற்றும் வாசனைக்காக நெய் சேர்த்து செய்வதால் இதை சின்ன குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*பலா சுளைகள் – 30

*வெல்லம் – 1/4 கிலோ

*நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

30 பலா சுளைகளை எடுத்து அதன் விதைகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பலா சுளைகள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வருவதற்கு முன் அடுப்பை அணைத்துக் விடவும்.

இந்த வெல்லப் பாகை வெந்து கொண்டிருக்கும் பலா சுளையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பலா சூளை + வெல்லப் பாகு கெட்டியாகும் வரை வதக்கவும்.

பின்னர் தேவையான அளவு நெய் ஊற்றி நன்கு கைவிடாமல் கிளறி விடவும்.

பலா பழக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் வரை கிளறி விட்டு இறக்கவும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றவும். அவை சூடேறியதும் சிறிதளவு உலர் திராட்சை மற்றும் சிறிதளவு முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இந்த தாளிப்பை பலா பழக் கலவையில் சேர்த்து கிளறி விடவும். இதை கேரளா மக்கள் சுக்க வரட்டி என்று அழைக்கிறார்கள்.