Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Photo of author

By Divya

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

நம்மில் பலருக்கு மீன் என்றால் அலாதி பிரியம். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல், பிரியாணி, சுக்கா உள்ளிட்ட பல ரெசிபிக்கள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் மீன் பொளிச்சது அதிக மணம் மற்றும் ருசியுடன் இருப்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்டு வருகின்றனர்.

இந்த மீன் பொளிச்சது செய்ய கடையில் விற்கும் மசாலாவை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்தால் அதிக ருசி மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மீன் – 6

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

*மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – தேவையான அளவு

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

வாங்கி வந்த மீனை சிறு துண்டுகளாக வெட்டி அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகள் மீது போட்டு தடவி விடவும். பின்னர் மீனில் மசாலா ஊறி வர 1 மணி நேரம் வரை விடவும். பின்னர் இதை வாழை இலையில் வைத்து மடித்து கொள்ளவும். பின்னர் வாழை இலைமேல் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சூடேற்றவும். பின்னர் அதில் தண்ணீர் சிறிதளவு தெளித்து தயார் செய்து வைத்துள்ள வாழை இலை மீனை மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். இந்த முறையில் மசாலா தயார் செய்து மீன் பொலிச்சது செய்தால் அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும். இந்த மீன் பொளிச்சது கேரளாவில் பேமஸான உணவு வகை ஆகும்.