Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் பஞ்சராயப்பம் – சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் பஞ்சராயப்பம் – சுவையாக செய்வது எப்படி?

பஞ்சராயப்பம் என்பது பச்சரிசி மாவில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பணியாரக்கல்லில் ஊற்றி எடுக்கும் உணவு ஆகும். உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் இனிப்பு பணியாரம். இந்த உணவு கேரளா மக்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சரிசி – 1 கப்

*வெள்ளை சர்க்கரை – 3/4 கப்

*ஏலக்காய் – 4

*வடித்த சாதம் – 1 கப்

*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – ஒரு சிட்டிகை அளவு

*பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 1 கப் அளவு பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் மிக்ஸி ஜாரில் ஊறவைத்துள்ள பச்சரிசியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து 3/4 கப் சர்க்கரை, 4 ஏலக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும். அதில் சிறிதளவு தூள் உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கையால் கலந்து விடவும். இதை 8 மணி நேரம் வரை ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பணியாரக்கல் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
அடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி நன்கு சிவக்க விட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் பஞ்சராயப்பம் சுவையாக இருக்கும். இந்த தித்திக்கும் பஞ்சராயப்பம் கேரளா மக்களின் ஸ்பெஷல் உணவு வகை ஆகும்.