Home Life Style Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் நேந்திரம் சிப்ஸ் – அசல் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் நேந்திரம் சிப்ஸ் – அசல் சுவையில் செய்வது எப்படி?

0
Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் நேந்திரம் சிப்ஸ் – அசல் சுவையில் செய்வது எப்படி?
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் நேந்திரம் சிப்ஸ் – அசல் சுவையில் செய்வது எப்படி?

நொறுக்கு தீனி அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். அதுவும் சிப்ஸ் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்த சிப்ஸில் காரம் காரம், இனிப்பு, புளிப்பு என பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அதிகம் விளையக் கூடிய நேந்திர வாழையை வைத்து சிப்ஸ் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை கேரளாவில் பேமஸான சிப்ஸ் வகை ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*நேந்திர வாழை – 2

*தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள் – தேவையான எ;அளவு

செய்முறை:-

2 நேந்திர வாழை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை காய் சீவல் கொண்டு வட்டமாக சீவிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

அவை சூடானதும் சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து பொரிக்கவும்.
அடுத்து மஞ்சள் சேர்த்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து வாழைக்காய் சிப்ஸை பொரித்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு செய்தால் வாழைக்காய் சிப்ஸ் அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.