Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் இனிப்பு போண்டா – இப்படி செய்தால் பஞ்சு போன்று இருக்கும்!!

0
83
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் இனிப்பு போண்டா – இப்படி செய்தால் பஞ்சு போன்று இருக்கும்!!

கேரளா இனிப்பு என்றால் தனி ருசியுடன் இருக்கும். மடக்கு, பாயசம், நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்டவைகள் கேரளா மக்களின் பேவரைட் இனிப்பு வகைகள் ஆகும். அந்த வகையில் கேரளா மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இனிப்பு போண்டா செய்வது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இனிப்பு போண்டா ரவையை வைத்து செய்யப்படுகிறது. ரவையில் அதிகளவு இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்தால் இவை குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இனிப்பு பண்டமாகும்.

தேவையான பொருட்கள்:-

*ரவை – 1 கப்

*பச்சரிசி மாவு – 1 தேக்கரண்டி

*வெள்ளை சர்க்கரை – 1/2 கப்

*உப்பு – 1 பின்ச்

*ஏலக்காய் தூள் – சிறிதளவு

*எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 முட்டையை ஊற்றி கலக்கி கொள்ளவும். பின்னர் 1 கப் வெள்ளை ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

தொடர்ந்து 1 பின்ச் அளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் 1 தேக்கரண்டி அளவு அரசி மாவு சேர்த்து மீண்டும் கலந்து விடவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இந்த ரவை கலவையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து போண்டா பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் சூடேறியதும் அதில் தயார் செய்து போண்டா மாவை சிறு உருண்டைகளாக போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். இந்த ரவை போண்டா கேரள மக்களின் பேவரைட் இனிப்பு பண்டமாகும்.

Previous articleஒரே இரவில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள்!!
Next articleஒரே நாளில் முகம் வெள்ளையாக தக்காளியுடன் இந்த 2 பொருட்களை பயன்படுத்துங்கள்!!