Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “ஸ்வீட் மைதா மடக்கு” – செய்வது எப்படி?

0
52
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “ஸ்வீட் மைதா மடக்கு” – செய்வது எப்படி?

“ஸ்வீட் மடக்கு” என்ற இனிப்பு வகை கேரளா மக்களின் விருப்ப இனிப்பு பண்டமாகும். மைதா, சர்க்கரை வைத்து செய்யப்படும் இவற்றை கடையில் கிடைக்கும் அதே ருசியில் செய்வது குறித்த தெளிவான செய்முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மைதா – 1 1/2 கப்

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*வெள்ளை சர்க்கரை – 3/4 கப்

*வெண்ணெய் – 2 தேக்கரண்டி

*ஏலக்காய் – 4

*எண்ணெய் – தேவையான அளவு

*அரிசி மாவு – 3 தேக்கரண்டி

*மைதா – 2 தேக்கரண்டி

*நெய் – 4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 1 1/2 கப் மைதா சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு தட்டு போட்டு மூடி சுமார் 1 மணி நேரம் வரை ஊற விடவும்.

அடுத்து ஒரு பவுலில் 3 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் 4 தேக்கரண்டி நெய் ஊற்றி நன்கு குழைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

அடுத்து அடுப்பில் 3/4 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து அரைக் கம்பி பதம் வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் பிசைந்து ஊற வைத்துள்ள மைதா மாவை மீண்டும் நன்கு பிசைந்து மூன்று உருண்டைகளாக பிரித்து கொள்ளவும். பின் அதை நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்

பின் தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டை பரவலாக தடவி கொண்டு ஓரத்தில் இருந்து பாயை சுருட்டுவது போல் சுருட்டவும் ஒவ்வொரு லைனுக்கும் நன்கு அழுத்தி விட்டு பின் உருட்டவும்

அடுத்து சிறு துண்டுகளாக கட் செய்து ஒன்றன் மேல் ஒன்றாக மைதா லேயரை வைத்து மீண்டும் தேய்க்கவும். அப்பொழுது தான் உள்ளே லேயர் லேயராக வரும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்துள்ள மைதாவை போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். எண்ணெயை அளவான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்

இதை காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகில் போட்டு பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்தால் ஸ்வீட் மடக்கு அதிக சுவையுடன் இருக்கும்.