Kerala Style Recipe: மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “பலாப்பழ ஹல்வா” இப்படி செய்யுங்க!!

0
187
#image_title

Kerala Style Recipe: மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “பலாப்பழ ஹல்வா” இப்படி செய்யுங்க!!

அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் பலாப்பழ ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை பால், பலாப் பழம், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹல்வா வகை ஆகும்.

தேவையான பொருட்கள்

*பலாச்சுளை – 4

*வெள்ளை சர்க்கரை – 1 கப்

*நெய் – 3 தேக்கரண்டி

*முந்திரி – 10

*ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

*கோதுமை மாவு – 1 தேக்கரண்டி

பலாப்பழ ஹல்வா செய்யும் முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பலாச்சுளை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். இதை தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் அரைத்த பலாச்சுளை விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு நெய் ஊற்றி கிண்டவும்.

பின்னர் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும். பலாச்சுளை விழுது வேகும் தருணத்தில் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து கிளறவும்.

தொடர்ந்து கிளறி வர ஹல்வாவின் நிறம் மாறத் தொடங்கும். அந்த சமயத்தில் தேவையான அளவு நெய்யை ஊற்றி சில நிமிடங்கள் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 10 அல்லது 15 முந்திரி சேர்த்து வறுத்து ஹல்வாவில் சேர்க்கவும். அடுத்து வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து மீண்டும் கிளறி விடவும். ஹல்வா இரும்பு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்

ஒட்டாமல் ஹல்வா திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி ஹல்வாவை பரப்பி விடவும். ஹல்வா ஆறியப் பிறகு ஒரு பவுலுக்கு மாற்றி பரிமாறவும். இந்த முறையில் பலாப்பழ ஹல்வா செய்தால் அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.

Previous articleமக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!
Next articleமுகம் அழகு பெற இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!