Kerala Style Recipe: “உள்ளி வடா”.. இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!
நம்ம ஊரில் கார வடை, மசால் வடை எப்படி பேமஸோ அதேபோல் தான் கேரளாவில் உள்ளி வடா பேமஸான பண்டமாகும். இது கடலை மாவு, மைதா மாவு, வெங்காயம் சேர்த்து பொரித்து உண்ணும் சுவையான ரெசிபி ஆகும். இந்த உள்ளி வடா கேரளா ஸ்டைலில் செய்யும் முறை
கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*கடலைமாவு – 4 தேக்கரண்டி
*மைதா மாவு – 4 தேக்கரண்டி
*வெங்காயம் – 3
*பச்ச மிளகாய் – 3
*கருவேப்பிலை – 2 கொத்து
*இஞ்சி – 1 துண்டு
*உப்பு – தேவையான அளவு
*எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:-
முதலில் 3 பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோல் இஞ்சி தோல் சீவி நறுக்கி கொள்ளவும். பின்னர் 2 கொத்து கருவேப்பிலை எடுத்து சுத்தம் செய்து அதையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு பவுலில் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு உதிரி உதிரியாக வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
இதை 15 நிமிடங்களுக்கு ஊற விடவும். அடுத்து 4 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 4 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு தட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை தட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து வடை பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அவை நன்கு சூடேறியதும் குறைவான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள வடை மாவை போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் உள்ளி வடா சூப்பரான டேஸ்டில் இருக்கும்.