கேரளா ஸ்டைல் சம்பா ரவா உப்புமா – உதிரியாக செய்வது எப்படி?

0
105
#image_title

கேரளா ஸ்டைல் சம்பா ரவா உப்புமா – உதிரியாக செய்வது எப்படி?

ரவையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

இதில் கேசரி, லட்டு, இனிப்பு போண்டா என பல வகைகள் இருக்கிறது. அதில் சம்பா ரவா உப்புமா உதிரியாக செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் நபர்கள் கூட விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*சம்பா ரவை – 200 கிராம்

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு, உளுந்து – 1 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 2 கொத்து

*இஞ்சி – பொடியாக நறுக்கியது(1 தேக்கரண்டி அளவு)

*பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

*தேங்காய் துருவல் – 1/4 கப்

*தண்ணீர் – 2 கப்*

உப்பு – தேவையான அளவு

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 200 கிராம் அளவு சம்பா ரவை சேர்த்து மிதமான தீயில் கருகிடாமல் வறுத்தெடுத்து கொள்ளவும்.

அடுத்து 1/4 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோல் 2 பச்சை மிளகாய் மற்றும் சிறு துண்டு இஞ்சி எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, உளுந்து மற்றும் 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு சேர்த்து பொரிய விடவும். பின்னர் 2 கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் மற்றும் 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும். தேங்காய் கலவையை கருகிடாமல் லைட்டாக வதக்கினால் போதும். அடுத்து ரவை அளந்த பவுலில் 2 முறை தண்ணீர் ஊற்றி தேங்காய் கலவையில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.அடுத்து வறுத்து வைத்துள்ள சம்பா ரவையை அதில் சேர்த்து மெதுவாக கிளறவும். கைவிடாமல் 2 முதல் 3 நிமிடங்கள் கிளறி மூடி போட்டு குறைந்த தீயில் ரவையை வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறி விடவும். இவ்வாறு செய்தால் சம்பா ரவை உதிரியாகவும், சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

Previous articleதொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 
Next articleபுதிதாக தங்கம் வாங்கினால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நிச்சயம் அடகு கடைக்கு போகாது!!