கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி?

0
276
#image_title

கேரளா ஸ்டைல் செம்மீன் முருங்கை குழம்பு – செய்வது எப்படி?

கேரள மக்களுக்கு விருப்பமான செம்மீன் மற்றும் முருங்கை காய் வைத்து குழம்பு செய்வது கமகம மணத்துடன் குழம்பு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*செம்மீன்- 1/2 கிலோ

*தனி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

அரைக்க:-

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*சின்னவெங்காயம் – 10

*இஞ்சி – 1 துண்டு

*பச்சைமிளகாய் – 3

தாளிக்க:-

*கடுகு – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை…

*முதலில் வாங்கி வந்த செம்மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின் அடுப்பில் ஒரு மண் சட்டி வைத்து அதில் புளி தண்ணீர்ஊற்றி கொதிக்கவிடவும்.

அடுத்து தனி மிளகாய்தூள், மஞ்சள் சேர்த்து கலந்து விட்டு நன்கு கொதிக்க விடவும்.

அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள செம்மீனை சேர்க்கவும். அடுத்து இஞ்சியை இடித்து அதில் சேர்க்கவும். பின்னர் பச்சைமிளகாயை நீள வாக்கில் நறுக்கி சேர்க்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள முருங்கை காயை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை வெந்து கொண்டிருக்கும் செம்மீனில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து 6 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து செம்மீன் முருங்கை குழம்பி சேர்க்கவும். இவ்வாறு செய்தால் செம்மீன் குழம்பு அதிக மணம் மற்றும் ருசியுடன் இருக்கும்.

Previous articleஆண்கள் படிக்க வேண்டாம்! பெண்கள் கட்டாயம் படிக்கவும்!
Next articleஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!