கேரளா ஸ்டைல் கப்பக்கிழங்கு கறி – சுவையாக எப்படி செய்வது?

0
133
#image_title

கேரளா ஸ்டைல் கப்பக்கிழங்கு கறி – சுவையாக எப்படி செய்வது?

கேரளர்களின் விருப்பமான கப்பக்கிழங்கில் சுவையான கறி ரெசிபி… செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்….

1)கப்பக்கிழங்கு – 1/4 கிலோ
2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
3)கடுகு – 1 ஸ்பூன்
4)பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
5)கறிவேப்பிலை – 1 கொத்து
6)கொடம்புளி – 3 முதல் 4
7)பூண்டு பல் – 5
8)இஞ்சி – 1 துண்டு(நறுக்கியது)
9)பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)
10)தக்காளி – 1(நறுக்கியது)
11)தேங்காய்த் துருவல் – 1/2 கப்
12)மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
13)மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
14)பெப்பர் – 1/2 ஸ்பூன்
15)பச்சைமிளகாய் – 2
16)உப்பு – தேவையான அளவு
17)மல்லித்தழை – தேவையான அளவு

செய்முறை….

ஒரு பாத்திரத்தில் கொடம்புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

கப்பக்கிழங்கை தோல் நீக்கி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்க்கவும். சிறிது மஞ்சள், பெப்பர் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கிய பின்னர் வேக வைத்த கிழங்கு சேர்க்கவும். அடுத்து ஊற வைத்த கொடம்புளி சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். பிறகு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். வாசனைக்காக சிறிது மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.