கேரளாவின் பாரம்பரிய தேங்காய் லட்டு – இவ்வாறு செய்தால் சுவையும் தித்திப்பும் கூடும்!

0
286
#image_title

கேரளாவின் பாரம்பரிய தேங்காய் லட்டு – இவ்வாறு செய்தால் சுவையும் தித்திப்பும் கூடும்!

தேங்காயை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருகம் விரும்பக் கூடிய ஒன்றாக இருக்கின்றது.

அதிலும் தேங்காய் லட்டு என்றால் நினைக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும். இந்த தேங்காய் லட்டை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் துருவல் – 1 கப்
*ஏலக்காய் – பத்து
*வெள்ளை சர்க்கரை – 3 தேக்கரண்டி
*வெல்லம் – 1/4 கப்
*நெய் – 2 தேக்கரண்டி
*சுத்தமான பால் – 1 கப்

தேங்காய் லட்டு செய்முறை:-

முதலில் ஒரு கப் அளவிற்கு தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு வெல்லத்தை போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். இதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நெய் ஊற்றவும்.

அவை சூடானதும் அதில் தேங்காய் துருவலை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் அரைத்து பொடியாக்கி வைத்துள்ள சர்க்கரை + ஏலக்காய் பொடியை போட்டு கிளறவும்.

இதனை தொடர்ந்து பொடியாக்கி வைத்துள்ள வெல்லத்தை போட்டு கிளறவும். பிறகு பால் சேர்த்து நன்கு வேக விடவும்.

தேங்காய் கலவையில் பால் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஒரு அகலமான தட்டில் இந்த தேங்காய் கலவையை கொட்டவும்.

பிறகு இவை இளஞ்சூடாக இருக்கும் பொழுது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இந்த முறையில் தேங்காய் லட்டு செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

Previous articleவாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு அரசுப்பணி! வருகின்ற 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!
Next articleவீட்டு செலவை குறைத்து அதிக பணம் சேமிக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!