இருட்டில் பேராசிரியைக் கொலை! ஆதாரம் டி_ஷர்ட் பாக்கெட்!

Photo of author

By Parthipan K

இருட்டில் பேராசிரியைக் கொலை! ஆதாரம் டி_ஷர்ட் பாக்கெட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி வயது 55.இவர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிர்வாக அதிகாரியாக வேலைப் பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி சண்முகமணி இவர் ஈச்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ராகுல் வருணன் என்ற மகன் இருக்கிறான் பண்ணிரன்டாம் வகுப்பு படித்து வருகிறான். சண்முகம் மணியின் தங்கை அனிதா அவரது வயது 45 அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் வெள்ளைச்சாமி வீட்டிலுள்ள மாடியில் தனி அறையில் தங்கியிருக்கிறார். கடந்த நாள் 9.7.2021 தேதி இரவு 9.30 மணி அளவில் அனிதாத் தங்கியிருந்த அறையில் திடீரென ஒரு விசித்திரமான சத்தம் கேட்டது.

அப்போது டிவி பார்த்துக்கொண்டிருந்தா வெள்ளைச்சாமி மனைவி சண்முகமணியிடம் மாடியில் ஏதோ விசித்திரமான சத்தம் கேட்கிறது எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து 3 பேரும் மாடிக்கு சென்றுப் பார்த்தபோது அங்குள்ள கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. உடனே ராகுல் வர்ணன் சித்தி அனிதாவுக்கு போன் பண்ணியுள்ளார். போனை எடுத்த அனிதா ‘அய்யய்யோ எனக்கு பயமா இருக்குதுடா’ என்ற சொல்லி போனை துண்டித்து விட்டாராம் ,அதைக் கேட்டு அதிர்ச்சி! அடைந்த வெள்ளைச்சாமிக் குடும்பதினர் உடனே பக்கத்து வீட்டின் மாடி வழியாக  அணிதா தங்கியிருந்தத் தனி அறைக்கு சென்றனர்.

கதவு உள்பக்கமாக தாப்பாள் போடப்பட்டிருந்தது உடனே ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார்கள் அரை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது.அதனால் தன் செல்போனில் டார்ச் லைட்டை அடித்து பார்த்தபோது அனிதா படுக்கையில் படுத்திருந்தார் சத்தம் போட்டு அவரை கூப்பிட்டும் பதில் இல்லை, இதை அடுத்து வெள்ளைச்சாமி பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களிடம் போய் உதவி கேட்டனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா படுத்து இருந்த பெட்டின் முழுவதும் ரத்தம் தாறுமாறாக இருந்தது. அவரின் இடது பக்க தாடையில் கூர்மையான காயமும், வலது பக்க மார்பின் மேல் பகுதிகளும் சிறிய காயமும் ,இருந்தது பிறகு அனிதாவுக்கு வெள்ளைச்சாமியின் மனைவி சண்முகமணி முதலுதவி அளித்துள்ளார்.

அப்போது அனிதாவுக்கு உயிர் இருப்பது தெரிய வந்தது உடனே அவரை தூக்கிக் கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருகிறார்கள். இதை அடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அனிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தியபோது மாவட்ட எஸ்பி சுதாகர் கூறியது என்னவென்றால் அனிதா அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயின் மாயமாகி இருந்தது அதனால் நகைக்காக தான் அவன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என எஸ்பி சுதாகர் சந்தேகித்தார். இந்த நிலையில்தான் அனிதாவின் அறையில் டீசர்ட் பாக்கட் ஆதாரமாக கிடந்தது, அந்த ஆதாரத்தை சேகரித்த போலீசார் அது யாருடையது என விசாரித்த போது அனிதாவைக் கொலை செய்த உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் என தெரியவந்தது இதைப்பற்றி சுதாகரிடம் விசாரித்தபோது அவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் உயரதிகாரி கூறுகையில் பேராசிரியை அனிதா இந்தகல்லூரியில் பணியாற்றுவதற்கு முன்பு, பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி இருக்கிறார்.

அப்போது அந்தப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் ஆக சுதாகர் பணியாற்றியுள்ளார், ஒரே பள்ளியில் வேலை பார்த்ததால் இருவருக்குமிடையில் பழக்கவழக்கங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் சுதாகருக்கு ஏற்கனவே திருமணம் ஆயிற்று ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் சுதாகர் தன் மனைவியிடமிருந்து வந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அனிதா சுதாகர்யிடம் தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார், அதனால் ஏற்பட்ட தகராறில் சம்பவத்தன்று அனிதாவை சந்திக்க சுதாகர் வந்திருக்கிறார் அப்போது திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

ஆத்திரமடைந்த சுதாகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனிதாவைக் கத்தியால்கொலை செய்திருக்கிறார். பிறகு நகைக்காகத்தான் இந்த கொலை நடந்தது போல போலீசார் கூறுகின்றனர் .அனிதா அணிந்திருந்த தங்க செயினையும் எடுத்துக் கொண்டு சுதாகர் தப்பித்து சென்றிருக்கிறார், அனிதாவுக்கும் சுதாகர் இடையே நடந்த தகராறில் சுதாகர் அணிந்திருந்த டீசர்ட் பாக்கட் கையில் சிக்கியிருக்கிறது. அதை கவனிக்காததால் சுதாகர் வசமாக போலீசிடம்  சிக்கிக்கொண்டார். இதையடுத்து அனிதாவின் செல்போனை ஆய்வு செய்த போது அவருடன் பேசிய தகவல் ஒன்று வெளிவந்தது இதையடுத்து சுதாகரன் கைது செய்திருக்கிறோம் என்றார்.