வீட்டில் பணத்தை பெருக்கும் சமையலறை பொருட்கள்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?
உங்கள் கையில் பணம் இருந்தால் தான் மதிக்க படுவீர்கள்.பணம் இல்லையென்றால் ஏளனமாக பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு வாழ்வு கொடுக்கிறது.அதே பணம் தான் ஒரு மனிதனின் வாழ்வை தொலைக்கச் செய்கிறது.
இந்த பணத்தை எப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் வீட்டில் தங்க வைப்பது எனது சவாலான ஒன்று.காரணம் உழைத்த பணம் கைக்கு வந்ததும் கண்ணை கட்டும் அளவிற்கு செலவுகள் வந்து விடுகிறது.
இந்த செலவுகளை சமாளித்து பணத்தை பெருக்க பூஜை அறை,பணம் வைக்கும் அறையில் சில பொருட்களை வைக்க வேண்டும்.
அவை லட்சுமி தேவிக்கு உகந்த வாசனை நிறைந்த பொருட்கள் ஆகும்.ஒரு துண்டு இலவங்கப்பட்டை,பச்சை கற்பூரத்தை அரைத்து ஒரு கிண்ணத்தில் கொட்டி பூஜை அறை,பணம் வைக்கும் அறையில் வைக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் பணம் ஈர்க்கப்பட்டு செல்வந்தர்கள் ஆவீர்கள்.