கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

0
81
#image_title

கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நம்முடைய கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு போன்ற கருமையான நிறம் தான். கருமையான நிறம் என்பது ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிப்பால் வருவதுண்டு. மேலும் ஒரு சிலருக்கு உடலில் சத்து ஏதேனும் குறைந்தால் கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படும். இதை மறையச் பெய்ய சூப்பரான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை பக்க செய்ய வேண்டிய வழிமுறைகள்…

கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை பக்க முதலில் சூடான தண்ணீரில் ஒரு துண்டை போட்டுக் கொள்ளவும். பின்னர் அதை எடுத்து நன்கு பிழிந்து கழுத்தில் சுற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு சிறிய பௌலில் அரை ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பாதி எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை எலுமிச்சம் பழத்தின் உட்பகுதியால் தொட்டு கழுத்துப் பகுதியில் ஸ்கிரப் வேண்டும். 5 நிமிடம் அப்படியே ஸ்கிரப் வேண்டும். பின்னர் 5 நிமிடம் கழிந்த பிறகு ஒரு டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு தக்காளி மற்றும் ஒரு உருளைக் கிழங்கு எடுத்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து பின்னர் கழுத்தில் தேய்க்க வேண்டும். இதே போல தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.