இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!
நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது.
அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் என்ற வாகனங்களிலே எங்கு சென்றாலும் செல்கின்றார்கள். பெரும்பாலான முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதில்லை. முழங்கால் வலி என்பது சிதைந்த தசை நாள் அல்லது கிழிந்த குரு தழும்பு போன்ற காயத்தால் ஏற்படுகிறது கீழ்வாதம் போன்ற நோய் தொற்றுகளும் உங்களுக்கு முழங்கால் வலியை ஏற்படுத்தும்.
இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் முழங்கால் வலி எப்போதுமே வராது. தரையில் படுத்து கொண்டு உங்கள் முழங்கால்களை மடக்கி பிறகு நீங்கள் சௌகரியமாக அமர்ந்ததும் ஒரு காலை தரையில் இருந்து தூக்க வேண்டும். பிறகு உங்கள் கைகளை தொடக்கி பின்னால் முழங்காலங்களுக்கு கீழே வைத்து உங்கள் முழங்கால்களை மார்பை நோக்கி இழுக்க வேண்டும்.
ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொண்டு பாதங்கள் தரையில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு இடுப்பு அகலத்திற்கு அப்பால் பாதங்களை விரித்து வைத்து கொள்ள வேண்டும்.
நேராக பார்த்து உங்கள் தொடை தசைகளை மட்டும் சுருக்க வேண்டும். பிறகு உங்கள் காலை நீட்டி பிறகு தொடக்க நிலைக்கு குறைக்க வேண்டும் இதுபோல மற்ற காலுக்கும் தொடர்ந்து செய்து வந்தால் முழங்கால் வலி குறையும்.