குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு!

0
163

குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு!

பெரும்பாலான வீடுகளில் நாம் நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்த்து வருகின்றோம்.அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் நமது சின்னஞ்சிறு குழந்தைகளை நாய் பூனைகளோடு சகஜமாக விளையாட விடுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக நம் குழந்தைகளை, செல்லப்பிராணிகள் கடித்து விட்டாலோ அல்லது நகங்களில் பூரி விட்டாலோ தடுப்பூசி அவசியமா இல்லையா என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்?

ஆம் நம் செல்லப்பிராணிகளான நாய்,பூனை போன்றவை ஏதேனும் நம் குழந்தைகளையோ அல்லது பெரியவர்களையோ கடித்துவிட்டாலோ அல்லது நகங்களில் பூறிவிட்டாலோ தடுப்பூசி மிக மிக அவசியமான ஒன்றாகும்.

ஏன் தடுப்பூசி மிக அவசியம்?

பொதுவாக நாய் பூனை குதிரை போன்ற அனைத்து விலங்குகளிலும் ரேபிஸ் என்னும் வைரஸ் இருக்கக்கூடும்.இந்த வைரஸ் தாக்கிய விலங்குகள் நம்மை கடித்தாலோ அல்லது நகங்களில் புறினாலோ,ஏன் நம் முகங்களில் நக்கினால் கூட இந்த வைரஸ் ஆனது நம் உடலினுள் செல்லும் அபாயம் உள்ளது.

இந்த வைரஸ் நம்மை தாக்கினால் நாம் பிழைப்பது என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் கடினமான ஒன்றாகும்.

எனவேதான் நாம் வீட்டில் வளர்த்த நம் செல்லப்பிராணிகளாக இருந்தாலுமே கூட குழந்தைகளையோ அல்லது பெரியவர்களையோ கடித்தால் உடனடியாக கடித்த இடத்தை சோப்பு கொண்டு நன்றாக கழுவி விட்டு உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையோ அல்லது தனியார் மருத்துவமனையோ சென்று இதற்கான தடுப்பூசியை மூன்று முதல் ஐந்து தவணைகள் வரை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.நம் வீட்டில் வளர்த்த நாய் பூனை தானே என்று கடித்தால் மருத்துவமனை சென்று அதற்கான தடுப்பூசியை போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.

எனவேதான் உங்கள் செல்ல குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளிடமிருந்து தள்ளி வைப்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நன்மை.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருடத்திற்கு 10-ல் இருந்து 30 பேர் வரை இந்த வைரஸினால் கொடூரமாக உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

author avatar
Pavithra