தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர்கள்!

0
141
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர்கள்!

1)அஸ்வினி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “காளங்கிநாதர்”. இவருடைய சமாதி கஞ்சமலையில் உள்ளது.

2)பரணி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “போகர்”. இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது.

3)கிருத்திகை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “ரோமரிஷி”. இவருக்கு சமாதி இல்லை. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி வணங்க வேண்டும்.

4)ரோகிணி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “மச்சமுனி”. இவருடைய சமாதி திருப்பரங்குன்றத்தில் இருக்கின்றது.

5)மிருகசீரிஷம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “பாம்பாட்டி”. இவருடைய சமாதி சங்கரன் கோயிலில் உள்ளது.

6)திருவாதிரை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “இடைக்காடார்”. இவருடைய சமாதி திருவண்ணாமலையில் உள்ளது.

7)புனர்பூசம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “தன்வந்தரி”. இவருடைய சமாதி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ளது.

8)பூசம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “கமல முனி”. இவருடைய சமாதி திருவாரூரில் உள்ளது.

9)ஆயில்யம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “அகத்தியர்”. இவருடைய சமாதி திருவனந்தபுரத்தில் உள்ளது.

10)மகம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “சிவ வாக்கிய சித்தர்”. இவருடைய சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

11)பூரம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் ராமதேவர்”. இவரை வழிபட அழகர் மலைக்கு செல்வது சிறப்பு.

12)உத்திரம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “காகபுஜண்டர்”. இவருடைய சமாதி திருச்சி, உறையூரில் உள்ளது.

13)அஸ்தம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “கருவூரார்”. இவருடைய சமாதி கரூரில் உள்ளது.

14) சித்திரை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “புண்ணாக்கீசர்”. இவருடைய சமாதி நண்ணா சேர் என்ற இடத்தில் உள்ளது.

15) சுவாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “புலிப்பாணி”. இவருடைய சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

16)விசாகம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “நந்தீசர்” மற்றும் “குதம்பை”. நந்தீசர் சமாதி காசி நகரத்திலும், குதம்பை சமாதி மாயவரத்திலும் உள்ளது.

17)அனுஷம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “வால்மீகி”. இவருடைய சமாதி எட்டுக்குடியில் உள்ளது.

18)கேட்டை

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “பகவான் வியாசர்”. இவரை நினைத்தாலே போதும்.

19) மூலம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “பதஞ்சலி”. இவருடைய சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

20)பூராடம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “ராமதேவர்”. இவரை வழிபட அழகர் மலைக்கு செல்வது சிறப்பு.

21)உத்திராடம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “சித்தபிரான் கொங்கணர்”. இவர் ஜீவசமாதி திருப்பதியில் உள்ளது.

22)திருவோணம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “தட்சிணாமூர்த்தி சுவாமிகள்”.
இவருடைய சமாதி பாண்டிச்சேரியில் உள்ளது.

23)அவிட்டம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “திருமூலர்”. இவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.

24)சதயம்

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “கௌபாலர்”.

25)பூராட்டாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “சோதி முனி”. இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர்.

26)உத்திரட்டாதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “டமரகர்”.

27)ரேவதி

இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் “சுந்தரானந்தர்”. இவருடைய சமாதி மதுரையில் உள்ளது.