தினமும் ஒரு கிளாஸ் BARLEY WATER பருகினால் கிடைக்கும் 8 நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

0
89
know-8-benefits-of-drinking-a-glass-of-barley-water-daily
know-8-benefits-of-drinking-a-glass-of-barley-water-daily

அரிசி வகைகளில் பார்லி ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.பார்லி அரிசியில் கஞ்சி காய்ச்சி பருகி வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் பார்லி அரிசி ஊறவைத்த நீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

பார்லி நீரில் நார்ச்சத்துக்கள்,ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஊட்டச்சத்து பானமாக இது திகழ்கிறது.

1)தினமும் காலை நேரத்தில் உணவு உட்கொள்வதற்கு முன்னர் பார்லி நீர் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது கட்டுப்படும்.

2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் ஒரு கிளாஸ் பார்லி நீர் பருகலாம்.

3)சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக அவ்வுறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பார்லி நீர் பருகுங்கள்.

4)உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பார்லி நீர் பருகலாம்.

5)இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பார்லி ஊறவைத்த நீரை பருகுவதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.

6)பார்லி நீர் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் காலையில் ஒரு கிளாஸ் பார்லி நீர் பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

7)உடல் எடையை குறைக்க பார்லி நீர் கட்டாயம் பருக வேண்டும்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க இது உதவுகிறது.

8)மலச்சிக்கல்,வாயுத் தொல்லை மற்றும் வயிறு கோளாறு நீங்க பார்லி ஊறவைத்த நீரை பருகலாம்.

பார்லி நீர் தயாரிக்கும் முறை:

ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பார்லி சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் நன்கு ஊறவிடவும்.காலையில் இந்த பார்லி நீரை வடிகட்டி பருக வேண்டும்.

Previous articleசூர்யாவை ஒதுக்கிய சுதா கொங்கரா.. லிஸ்டில் எடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம்ரவி!!
Next articleஇந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!