தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

0
89
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

*கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.

*கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது.

*கொடிமரம்,நந்தி,பலிபீடம் போன்றவற்றின் நிழல்களை மிதிக்கக்கூடாது.

*கோவிலுக்கு சென்றால் சாமி தரிசனம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.அதை விடுத்து வெட்டி கதைகளை பேசக்கூடாது.

*விளக்கு எரியாமல் இருக்கும் சமயங்களில் கர்ப்ப கிரகத்தை வணங்க கூடாது.

*அபிஷேகம் நடக்கும் நேரத்தில் கோவிலை சுற்றி வரக் கூடாது.

*கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொட்டு வணங்க கூடாது.

*கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.

*கோவிலுக்குள் சென்று விட்டால் மனிதர்கள் அனைவரும் சமம்.எனவே ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலில் விழுந்து வணங்க கூடாது.

*கோவிலில் உள்ள படிகளில் உட்காரக் கூடாது.

*சிவ பெருமான் கோவிலில் அமர்ந்து வர வேண்டும்.பெருமாள் கோவிலில் அமரக் கூடாது.

*கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கை,கால்களை கழுவக் கூடாது.

*வாசனை இல்லாத பூக்களை தெய்வத்திற்கு வைக்க கூடாது.

*மண் விளக்கில் தீபம் ஏற்றுவதற்கு முன் அதை சுத்தம் செய்து பின்னர் ஏற்ற வேண்டும்.

*கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது.

*கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக் கூடாது.

*புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்க கூடாது.முதலில் தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.அதேபோல் கோவில் குளத்தில் கல்லை போடா கூடாது.

*கோவிலை வேகமாக வலம் வரக் கூடாது.

*தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.