பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!!

0
36
#image_title

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!!

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒற்றைத் தலைவலி பிரச்சனை என்பது வாழ்கையை முடக்கிப் போடும் அளவுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த ஒற்றை தலைவலியை குணப்படுத்த சிலர் உடனே நேரடியாக சென்று ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கை வைத்தியம் செய்வார்கள். ஆனால் என்ன செய்தாலும் இந்த இரண்டு வழிமுறைகளிலும் ஒற்றைத் தலைவலி குணமாகாது.

இந்த ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நாம் சில உணவுப் பொருட்களை நமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளை வேண்டும். அந்த உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம்.

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த உதவும் உணவு வகைகள் சில…

* பச்சை இலை காய்கறிகள்

ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட நாம் அதிகம் பச்சை இலை காய்கறிகளை சாப்பிட வேண்டும். பச்சை இலை காய்கறிகளில் மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த மெக்னீசியம் சத்து நமக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலியை குறைத்து மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.

* மீன் உணவுகள்…

ஒற்றைத் தலைவலிக்கு மீனும் சிறந்த மருந்தாக பயன்படும் ஒரு உணவு பொருள் ஆகும். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் நமக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலியை குறைத்து குணப்படுத்த பயன்படுகிறது.

* புதினா எண்ணெய்…

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அனைவரும் புதினா கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி விரைவில் குணமடையும்.

* எலுமிச்சை நீர்…

ஒற்றை தலைவலி இருக்கும் பொழுது சிறிதளவு எலுமிச்சை நீர் குடிக்கலாம். எலுமிச்சை நீர் குடிப்பதால் ஒற்றை தலைவலி ஏற்படுத்தும் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவையும் சரியாகும்.

* நட்ஸ் வகைகள்…

ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள நர்ஸ் வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.