தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!!

0
37
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!!

*திருமணமான பெண்கள் தங்களின் தாய் வீட்டில் ஏற்றி பூஜை செய்த விளக்கு மற்றும் பயன்படுத்திய பூஜை சாமான்களை ஒருபோதும் புகுந்த வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது.

*அதேபோல் தாய் வீட்டில் பயன்படுத்தப்பட்ட துடைப்பம், அரசி அளக்கும் படி, முறம் உள்ளிட்டவைகளையும் தங்களின் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது. இவ்வாறு செய்தால் தாய் வீட்டில் வறுமை அதிகரிக்கத் தொடங்கும். எதிர்மறை ஆற்றல் தாய் வீட்டிற்குள் வந்து விடும்.

*சமைப்பதற்காக எந்த ஒரு கீரையும் தாய் வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாது. அதேபோல் பாகற்காய், முருங்கை காய், கருவேப்பிலை, கோவைக்காய், சுண்டைக்காய் போன்ற காய்கறி வகைகளில் ஒருபோதும் தாய் வீட்டில் இருந்து கொண்டு வரக் கூடாது. இந்த கசப்பான காய்கறிகளைப் போல் பொறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்குமான உறவு கசந்துவிடும்.

*தாய் வீட்டில் மகளுக்கு மளிகை சாமான் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் இருந்தாலும் உப்பு, புளி, எண்ணெய் மூன்றும் அதில் சேரக் கூடாது.

*கோலம் போடுவதற்காக தாய் வீட்டில் உள்ள கோல மாவை எடுத்து வரக் கூடாது.

*தாய் வீட்டில் இருந்து பெண்கள் கத்தி, அரிவாள், அரிவாள்மனை, கத்தரிக்கோல், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது. ஒருவேளை இந்த பொருட்களை தாய் வீட்டில் இருந்து அவசியம் எடுத்து வர வேண்டுமென்று இருந்தால் அந்த பொருளுக்கான முழு விலையையும் கொடுத்து விட்டு தான் வாங்க வேண்டும். இல்லையென்றால் தாய் வீட்டிற்கும், கணவன் வீட்டிற்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கி விடும்.