ஆளை சுண்டி இழுக்கும் கேரளா மக்களின் பேவரைட் “Banana Bonda” – செய்வது எப்படி?

0
32
#image_title

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா மக்களின் பேவரைட் “Banana Bonda” – செய்வது எப்படி?

கேரளாவில் விளையும் பழ வகைகளில் ஒன்று நேந்திரம். இதை வைத்து செய்யப்படும் “வாழைப்பழ போண்டா” என்ற இனிப்பு வகை கேரளாவில் மிகவும் பேமஸான ஒன்றாகும். வாழைப்பழம் + கோதுமை மாவு + சர்க்கரை கலவையில் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பண்டம் வாழைப்பழ போண்டா.

தேவையான பொருட்கள்:-

*வாழைப்பழம் – 1

*கோதுமை மாவு – 1 கப்

*முட்டை – 1

*சர்க்கரை – 1/4 கப்

*ஏலக்காய் – 2

*வெள்ளை ரவை – 1/4 கப்

*உப்பு – 1 பின்ச்

*சோடா உப்பு – 1 பின்ச்

*எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

வாழைப்பழ போண்டா செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1/4 கப் வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதோடு 2 ஏலக்காய் மற்றும் 1 வாழைப்பழத்தை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை நன்கு அரைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து எடுத்து வைத்துள்ள 1 கப் கோதுமை மாவு சேர்த்து கலந்து விடவும். அதன் பின் 1/4 கப் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.

பிறகு 1 பின்ச் தூள் உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து விடவும். மாவு இலகி வந்ததும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த போண்டா மாவு கலவையை 10 நிமிடம் வரை ஊற விடவும். அடுத்து அடுப்பில் ஓரு வாணலி வைத்து அதில் போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள மாவை போண்டா போல் எடுத்து எண்ணெயில் போடவும். போண்டா இருபுறமும் வெந்து வந்ததும் எண்ணெயில் இருந்து வடித்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் இனிப்பு போண்டா அதிக சுவையுடன் இருக்கும்.

இந்த போண்டாவை மைதாமாவு, உளுந்து மாவு, அரசி மாவு என எதில் வேண்டுமாலும் செய்யலாம்.