Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள்

0
238

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள்

இவற்றின் பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

மலை:

மலை ஏறுவது போல கனவு வந்தால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் மற்றும்புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

மரணம்:

மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

பேய்:

பேய் கனவில் வந்தால், உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் ரகசியம் ஒன்றை நினைத்து நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அந்த ரகசியத்தை மூடி மறைக்க கூடாது.

புது துணி:

புது துணி போடுவது போல கனவு கண்டால், புதிய சிக்கல்கள் உருவாகும். எதிர்பாராத வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கும். மன அமைதியில்லாமல் சிறிது நாட்கள் இருப்பீர்கள். சில நாட்களுக்கு பிறகு யார் மூலமாவது நன்மை கிடைக்கும் என்று பொருள்.

விருந்து:

பலருடன் சேர்ந்து விருந்து உண்பது போல் கனவு கண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதைக் குறிக்கும்.

நெருப்பு:

நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடையூறு செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது என்பது பொருள்.

Previous articleதேவபுரீஸ்வரர் மதுர பாஷினி அம்மன் திருக்கல்யாணம்!
Next articleஇந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..